Sunday, August 4, 2013

அழிக்கும் சக்தி கொண்ட ஆயுதம்

நீங்கள் இந்துவா,முஸ்லிமா,கிறிஸ்டியனா என்று உங்கள் உடலுக்கு அக்கறை இல்லை.

இந்த உயிர் உள்ள ஜந்துவிற்கு உங்கள் மத ,வேதாந்த,பகுத்தறிவு மற்றும் மனிதனின் அனைத்து தரப்பட்ட கருத்துகளிலும் ஆர்வம் இல்லை.

உலகத்தில் மிக அழிக்கும் சக்தி கொண்ட ஆயுதம் கடவுள் தான்.

விலங்குகள் தம் இனத்தை சேர்ந்தவற்றை அழிப்பதில்லை.அனால் மனிதன் தன்னுடைய கொள்கைகள் ,கருத்துகள் மற்றும் மத கருத்துகளை முன் நிறுத்தி மனிதனையே அழிக்கிறான்.

மனிதனின் சமுதாயத்தோடு ஒப்பிடுகையில் விலங்கின் காடு அமைதியானது,அர்த்தம் உடையது.இந்த மனித காட்டை மதங்கள் தான் உருவாக்கி உள்ளன.

இப்போது உலகில் உள்ள பிரசினைகளுக்கு மதமும் மத குருமார்களும் அவர்களின் துளி கூட அர்த்தம் இல்லாத கருத்துகளும் தான் காரணம்.

இரண்டு உலக போர்களில் இறந்தவர்களை விட மதத்தின் பெயரால் இறந்தவர்கள் அதிகம்.
மதங்களும், புனித நூல்களும்,மத குருமார்களும் உங்களை நோக்கி வீசும் கருத்துகளின் பின்னால் ஏதாவது உருப்படியாக உள்ளதா? என்று நீங்கள் உங்களுக்காக கண்டு பிடிக்க வேண்டும்.

உங்கள் மத,ஆன்மிக,ஆத்திகம்,நாத்திகம் இன்னும் என்ன என்ன கருத்துகள் உள்ளதோ அத்தனை கருத்துகளும் வெறும் வார்த்தைகள் தான்.அதனால் மனித உடலுக்கு துயரம் தவிர வேறு எதையும் கொடுக்க முடியாது.

-
யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி.